தமிழ் என்பது மொழி மட்டும் அல்ல! அது உலகின் முதல் நாகரீகத்தின் அடையாளம்...!
சாகக் கல்வி என்னும் மனிதப் பிறப்பின் பயனை உலகிற்கு வழங்கிய மெய் மொழி தமிழ். கடின ஒலிக் கலவையின்றி எளிமையான ஓசைகளைக்கொண்டு உயிரினை உணர்ந்து அதன் மூலம் இறைவனை அடையும் வழியைப் பழுதின்றிக் காட்டும் ஒரே மொழி நம் தாய்த் தமிழ்.
ஃ - என்னும் ஆய்த எழுத்து தமிழ் மொழியில் அதிகம் பயன்பாட்டில் இல்லை என்றாலும் அஃது அதனை உச்சரிப்பவர்களின் மூச்சுக்காற்றினை செலுத்த வேண்டிய பகுதியில் அழுத்தம் கொடுத்து மூன்றாவது கண் எனப்படும் மெய்யறிவின் திறவுகோளாக உள்ளது.
ஒழுக்கம், கருணை என்ற இரண்டே இறைவனை அடையும் வழி என்று மெய்பித்துக்காட்டிய வள்ளலார் போற்றிய தந்தை மொழி தமிழ்.
இலக்கணத்தை மொழிக்கு மட்டும் இன்றி மானுட வாழ்வினுக்கும் பொருந்தும் வகையில் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாதத் தனித்தன்மையைக் கொண்டது நம் தமிழ்
க் + அ = க
உயிரும் மெய்யும் சேர்ந்ததே எங்கள் உயர் தமிழ்
நீங்கள் விரும்பிய பாடல்
உங்களுக்கு பிடித்தப் பாடலை மற்ற நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்